தமிழகத்தில் பணியாற்றி வரும் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,
1) டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த அதுல்யா மிஸ்ரா தமிழ்நாடு இளைஞர் திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2) விளையாட்டுத்துறை கூடுதல் செயலாளராக இருந்த செல்வி அபூர்வா தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3) வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக இருந்த ஹிடேஷ்குமார் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
4) வீட்டு வசதி துறை நிர்வாக இயக்குனராக இருந்த சஞ்சோன்கம் ஜடாக் சீரு சமூக நலன் மற்றும் பெண்கள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5) விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம் சமூக மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6) நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளராக இருந்த செல்வராஜ் தமிழ் வளர்ச்சி துறை செயலாளராக நியமிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
7) தொழில் நிறுவனம், முதலீடு மற்றும் வணிகத்துறை செயலாளராக இருந்த லில்லி நகர்ப்புறம் மற்றும் நீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8) தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய நிர்வாக இயக்குனராக இருந்த நந்தகோபால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9) தமிழ்நாடு அரசு தேர்வு வாரிய தேர்வுகள் கட்டுப்பாட்டு இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்த கிரண் குர்ரலா நகர்ப்புற கிராம நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலவாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த பழனிச்சாமி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11) தமிழக நெடுஞ்சாலை துறை கூடுதல் செயலாளராக இருந்த கணேசன் நகர்ப்புறம் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12) பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய ஆணையராக இருந்த அணில் மிஷ்ராம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
13) நகர்ப்புறம் மற்றும் திட்ட இயக்குனராக இருந்த சரவணவேல்ராஜ் தமிழ்நாடு வீட்டு வசதி துறை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
14) வருவாய்த்துறை இணை ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் வருவாய்த்துறை இணைச் செயலாளராக ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
15) மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரிய உறுப்பினர் செயலாளராக இருந்த பூங்கொடி ஸ்டார்ச் மற்றும் சேகோ உற்பத்தியாளர்கள் சேவை தொழிற்கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.