ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி


கத்தார் உலகக் கோப்பையில் அமெரிக்க கால்பந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் சிதறடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெதர்லாந்து அணி.

நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள்

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் 2வது சுற்று ஆட்டங்கள் தொடங்கி உள்ளன.

ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி | Netherlands Beat Usa To Reach Quarter Finals

@getty

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டிபே முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து 46வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த டேலி பிளைன்ட் 2வது கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி | Netherlands Beat Usa To Reach Quarter Finals

@getty

2வது பாதி ஆட்டத்தில் 76 வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஹாஜி ரைட் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் டம்ப்ரைஸ் தமது அணிக்காக 3வது கோலை அடித்தார்.

நெதர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதி

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி: கத்தார் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி | Netherlands Beat Usa To Reach Quarter Finals

@reuters

கத்தார் உலகக் கோப்பை தொடரை பொறுத்தமட்டில், லீக் சுற்றுகளில் எதிர்பாராத தோல்விகளை எதிர்கொண்டு ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் உருகுவே அணிகள் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.