தற்போது தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அனர்த்தத அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அனர்த்தத அறிவிப்பு , கொழும்பு மாவட்டத்தின் சிதாவக்க, காலி மாவட்டத்தில் நாகொட, களுத்துரை மாவட்டத்தில் இங்கிரிய, கேகாலை மாவட்டத்தில் எட்டியந்தோட்டை மற்றும் வரகாபொல, மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும் எலபாத்த ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.