தமிழக முழுவதும் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர்கள் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்களின் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டத்தை மின்வாரிய தொழிற்சங்கங்கள் நடத்தின. அந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கையான பிபி.2 அறிவிப்பானை ரத்து செய்வது, அகவிலை உயர்வு, தனியார் பங்கீட்டுடன் மின்வாரியத்தை மறு சீரமைப்பு நடவடிக்கை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழக அரசையும் மின்வாரியத்தையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். மேலும் தமிழக முழுவதும் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.