அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. கோலாகலமாக தயாராகும் முடிசூட்டு விழா?

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு

ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும், மக்கள் மத்தியில் அதிருப்தி எதையும் ஏற்படுத்தவில்லை. காரணம், எந்த சூழலிலும் தனது மகனுக்கு பதவிகள் வழங்கப்படாது என்று அறிவித்திருந்த மு.க. ஸ்டாலின் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் என்ற பெரிய பதவியை வழங்கினார்.

அதுவே வியப்பை ஏற்படுத்திய நிலையில் உதயநிதியை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற வைத்து சட்டசபைக்கு அனுப்பப்பட்டார். எம்எல்ஏ-வாக உதயநிதி சட்டசபைக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் , அவரைச் சுற்றியுள்ள மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று மரியாதை கொடுத்தது வியப்பாக இருந்தது. முதலமைச்சரும் உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் போன்ற சிலருக்கு மட்டுமே இத்தகைய மரியாதை உண்டு.

ஏற்கனவே, முதல் முறையாக எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், தற்போதைய அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை என்று திமுக மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அவ்வாறு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் இளைஞர் நலன், விளையாட்டு, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் உதயநிதிக்கு ஆதரவாக உள்ளன.

அதேபோல, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு விருப்பமில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினே நான்காவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அமைச்சரானார். அப்போது அவருக்கு 30 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவம் இருந்தது. கட்சிக்கும் அவருக்கும் அது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது உதயநிதிக்கு அமைச்சர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அது வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்தனர்.

ஆனால், அதிருப்திகள் எந்த அளவுக்கும் உதயநிதியின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. இந்த நிலையில், உதயநிதி அமைச்சராகும் காலம் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 16 ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்து முடிசூட்டும் விழாவை கோலாகலமாக கொண்டாட அறிவாலயத்தில் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.