மும்பை,
வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வங்காளதேசத்தின் அபார பந்து வீச்சால் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் கே.எல். ராகுல் மட்டுமே சிறப்பாக ஆடி 73 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 136 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி தோல்வி பெறுவது உறுதி என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் 10 வது விக்கெடுக்கு ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட நான்கு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்ட்டுள்ளது.
இதனை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒப்புக்கொண்டதால் இந்திய அணிக்கு, ஐசிசி விதிப்படி 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .