2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி


2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி | New Economic System Facing 2050 President

இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பழமையான பொருளாதாரத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியாது

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி | New Economic System Facing 2050 President

இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார மறுசீரமைப்புக்கு மேலதிகமான பணி.
பழமையான பொருளாதார முறைமையை கையாள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முதலாவதாகவும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தேவைப்படுவது வெளிநாட்டு அந்நியச்செலாவணியே.

மேலும், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், கடன் மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க வேண்டும் என்பதுடன், மிகத் திருத்தமான பொருளாதார முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி | New Economic System Facing 2050 President

இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை இருக்கின்றது. இதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி | New Economic System Facing 2050 President

அடுத்த வருடம் மின் சக்தித் துறைக்கு மாத்திரம் 300 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த செலவை மீளப் பெற்றக்கொள்வதற்கான மாற்றுவழிகளைத் தேட வேண்டும்.

வலுச்சக்தி துறையில் புதிய மாற்று சக்திகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. புதுப்பிக்கத்தக்க சக்திக்கு பதிலாக பசுமை ஹைட்ரஜன் சக்தியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளா்.

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி | New Economic System Facing 2050 President

இந்த நிகழ்வில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser), இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, இந்திய என்.ஐ.டி.ஐ யின் பிரதம நிறைவேற்ற அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் ஆகியோரும் உரையாற்றினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ன, ஹர்ஷ டி சில்வா மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.