வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பேதுல் :மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பேதுல் மாவட்டத்தின் மாண்டவிகிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 8 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவனை மீட்க இரண்டு நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகவும், அசைவின்றி இருப்பதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
![]() |
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் அருகே 25 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதன் வழியாக சிறுவனை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து பேதுல் மாவட்ட கலெக்டர் அமன்பிர் சிங், கூறுகையில், ”சிறுவன் வயலில் விளையாடிய போது தவறி ஆழ்துளை கிணற்றில்விழுந்துவிட்டான்.
”இதுகுறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்றார். இந்நிலையில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் சிறுவனை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement