கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்று ஊரடங்கால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாயாகவும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 91. 43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐந்து மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றதால் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதையடுத்து குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் தொடர்ந்து 200வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.