கட்சியில் இருந்து விலகுவதற்கு அவர் தான் காரணம்! சூர்யா சிவா பகிரங்க குற்றச்சாட்டு!

சமீபத்தில் வெளியான ஒரு ஆடியோ தமிழக பாஜக மற்றும் மக்களிடையே கடும் அதிர்வை ஏற்படுத்தியது.  தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.,வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையே நடந்த அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது.  பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில் இருவரும் பொதுவெளியில் நாங்கள் அக்கா – தம்பி போல என்று பேட்டி அளித்தனர்.

இருப்பினும் சூர்யா சிவாவை கட்சி பொறுப்பில் இருந்து 6 மாதம் நீக்குவதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.  இந்நிலையில், நான் கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக சூர்யா சிவா தெரிவித்தார்.  இது தொடர்பாக டிசம்பர் 6ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையில், ” அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.  அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும். 

இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று கூறி இருந்தார்.  மேலும், L முருகனையும் தனது மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டு அண்ணாமலையின் பணிகளில் குறிக்கிடாதீர் என்று விமர்சித்து இருந்தார்.  தற்போது தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தான் தான் கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என்று ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். இது பாஜக கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.