கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சூடுபடுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி எம்ஜிஆர் நகர் தொகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா(48). இவர் நேற்று காலை குளிப்பதற்காக ஹீட்டரை ஆன் செய்துள்ளார். பின்பு சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பது பார்ப்பதற்காக கை வைத்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பிரேமாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.