மிர்புர்,
3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டியில் 2-வது ஓவரை சிராஜ் வீசினார். ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. தொடக்க வீரர் அனாமுல் ஹக், ஸ்லிப் பக்கம் அளித்த கேட்சை நழுவ விட்டார் ரோஹித் சர்மா. அப்போது பெரு விரலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக ஓய்வறைக்குத் திரும்பினார் ரோஹித் சர்மா.
தற்போது பிசிசிஐயின் மருத்துவக் குழு ரோஹித் சர்மாவைக் கண்காணித்து வருகிறது.ரோகித் சர்மாவுக்கு உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு செயப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது