18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிரான சட்டம் தான் போக்ஸோ. இந்த சட்டமானது 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களை திருமணம் செய்பவர்களை கைது செய்யவும் பயன்படுத்தப்பட்டது.
அத்துடன் டீன் வயதில் காதலித்து விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தாலும் கூட ஆணுக்கு எதிராக இந்த போக்சோ சட்டம் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கின்றார்.
18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுடன் அவர்களது விருப்பத்துடன் உறவில் இருந்தாலும் கூட அவர்கள் மீது இதுவரை போக்ஸோ சட்டம் பதியப்பட்டது. இதன் காரணமாக, இளைஞர்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக மனித தன்மையுடன் அவர்களை அணுக வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கின்றார்.