அம்மா மறைந்த நன்னாள்: நல்ல நோக்கத்தில் சொன்ன எடப்பாடி – ராஜன் செல்லப்பா நூதன விளக்கம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த 5ஆம் தேதி அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில்

தலைமையிலான அணியினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது, ‘அம்மா மறைந்த நன்னாள்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதா மறைந்த தினமே சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் சூழலில், அவரது நினைவு நாளின்போது, ‘அம்மா மறைந்த நன்னாளில்’ என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டது கூடுதல் சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, அம்மா மறைந்த நன்னாள் என எடப்பாடி பழனிசாமி கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக வருகிற டிசம்பர் 9, 13, 14 ஆகிய தேதிகளில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ள நிலையில். அதற்கான ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்ட அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அம்மா மறைந்த நன்னாள் என எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜன் செல்லப்பா, “மற்ற தலைவர்கள் போல எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி வைப்பதை பார்த்து படிக்கும் பழக்கம் இல்லை. மனதில் பட்டதை படமாக கூறுபவர். உறுதிமொழி பத்திரத்தில் சில பிழை இருப்பதால் அந்த மாறுதலான வார்த்தைகள் வந்துள்ளது. அவர் கூறியதை நாங்கள் நல்ல நோக்கத்தில் தான் பார்க்கிறோம். அன்று ஐந்தாம் தேதி சிவனுக்கு உகந்த நாள் பிரதோஷம் என்பதால் நன்னாள் என கூறி இருக்கலாம். அல்லது அதிமுகவிற்கு சரியான தலைவர் எடப்பாடி பழனிசாமி என தேர்ந்தெடுத்து டெல்லிக்கு கூப்பிட்ட நன்னாள் எனவும் குறிப்பிடலாம். தவறான நோக்கத்தில் அதனை படிக்கவில்லை.” என்று விளக்கம் அளித்தார்.

பொதுக்குழுவில் நல்லது நடக்கும் என

கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜன் செல்லப்பா, “ஓபிஎஸ் கூட்டப் போவது கண்காட்சியாக இருக்குமே தவிர பொதுக்குழு அல்ல. அவரிடம் இருந்த ஒரே ஒரு பேச்சாளரும் திமுகவுக்கு போய்விட்டார். இது ஓபிஎஸ் திமுகவினரிடையே இருந்த தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த உறவை பயன்படுத்தியே அவர் திமுகவிற்கு சென்றுள்ளார். டிடிவி தொடங்கியது போல் ஓபிஎஸ்சும் தனியாக கட்சி தொடங்கினால் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எங்களிடம்தான் கட்சி இன்னமும் உள்ளது.” என்றார்.

ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து பேசிய ராஜன் செல்லப்பா, “மக்கள், கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளோம். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸ்சிடம் தொண்டர்களும் இல்லை, கட்சி நிர்வாகிகளும் இல்லை, கட்சியும் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் மூத்த வழக்கறிஞர் அவருக்காக வாதாட தயாராக இல்லை. ஆகையால்தான் இந்த வழக்கு தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. தோல்வி அடைவோம் என தெரிந்தும் எந்த வழக்கறிஞரும் வழக்கை வாதாட மாட்டார்கள். இதனால்தான் இலவச சட்ட மையத்தை நாட வேண்டிய பரிதாபமான நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.” என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத அரசு தற்போது ஆண்டு கொண்டிருக்கிறது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் போராட வேண்டிய நிலை உள்ளது என்றார்.

முன்னதாக, அழகர்கோயிலில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், ஓபிஎஸ் மிரட்டப்படுவதாக கோவை செல்வராஜ் கூறிய கருத்துபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஓபிஎஸ் அணியில் இருப்பதே 4 பேர்தான் அதில் யார் அவர்களை மிரட்டுவது என கேள்வி எழுப்பியதுடன், எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறிவிட்டு சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.