மேகமூட்டமான வானம் :100 மி.மீக்கும் அதிகமான பலத்தமழை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022 டிசம்பர் 08 ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென் மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள “Mandous” என்றசூறாவளியானது இன்று காலை 0830 மணிக்கு வடஅகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம்கொண்டிருந்தது. அதுமேற்கு- வடமேற்குதிசையில் நகரக்கூடிய  சாத்தியம்உயர்வாகக் காணப்படுவதுடன், டிசம்பர் 09ஆம் திகதி நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேசகரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலானபிரதேசங்களில் மேகமூட்டமான வானம் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழைபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதுடன், சிலஇடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும்காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்தியமாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.