கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புலவன்குப்பம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது சிறுமியின் தந்தையின் நண்பரான பக்கத்து ஊரை சேர்ந்த சோழன் (32) என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமி அவரை கீழே தள்ளிவிட்டு வெளியே ஓடி உள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சி அடைந்த நிலையில், இது சம்பவம் குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தீவிரமாக தேடி வருகின்றனர்.