
இணையதளத்தில் லீக்கான கமலின் சேனாபதி லுக்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் , பிரியா பவானி சங்கர், சித்தார்த் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு படமாக்கப்படும் காட்சிகளை சிலர் மொபைலில் படம் எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள். அதில் சேனாபதி வேடத்தில் கமல்ஹாசன் நடந்து செல்வது போன்ற புகைப்படம் வைரலானது.