சமந்தாவின் நிலையை என்னால் உணர முடிகிறது : பியா பாஜ்பாய்

தமிழில் கோ, கோவா, ஏகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய். துறுதுறுப்பும் சுறுசுறுப்புமாக படங்களில் காணப்படும் பியா, தற்போது சமந்தாவின் உடல்நிலை குறித்து கூறியுள்ள தகவலில் தன்னைப் பற்றியும் ஒரு அதிர்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும் தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக தற்போது அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த நோய் பற்றி ஒவ்வொரு விதமாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் தான் நடிகை பியா தற்போது சமந்தா எந்தவிதமான துன்பத்தை அனுபவித்து வருகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். காரணம் இதற்கு முன்னதாக நானும் இதேபோன்ற ஒரு கடினமான சூழலை சந்தித்து தான் மீண்டு வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இது பற்றி இன்னும் அவர் விரிவாக கூறும்போது, “கடந்த 2015ல் படப்பிடிப்பு சமயத்தில் திடீரென வலது காலில் வலி ஏற்பட்டது. படப்பிடிப்பிற்கான உடற்பயிற்சியின்போது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மறுநாள் காலை எழுந்தபோது இடது காலிலும் அதேபோன்று வலி ஏற்பட்டது அந்த சமயத்தில் நான் உட்காரவோ எழுந்து நிற்கவோ மிகவும் சிரமப்பட்டேன்.

உடனடியாக மருத்துவரிடம் ஆலோசித்து அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டபோது எனக்கு இதேபோன்று தசை நார் அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது. இருந்தாலும் மீண்டும் அதை உறுதி செய்து கொள்வதற்காக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பரிசோதனை செய்து கொண்டேன். ஆனால் நல்ல வேளையாக அதில் எனக்கு தசைநார் அழற்சி பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் அனுபவித்த வேதனைகளை கணக்கிடும்போது, சமந்தா தற்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார் பியா பாஜ்பாய்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.