தொண்டையில் கிச் கிச் ஏற்படுகிறதா? இதனை சரி செய்ய இதோ சில சிறந்த தீர்வு


 பொதுவாக குளிர் காலம் வந்துவிட்டாலே பலருக்கு தொண்டை கரகரப்பு பிரச்சினை இருக்கும்.

இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். இதற்காக பலர் கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப்போடுவதுண்டு.

இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகளும் உள்ளன. தற்போது சில மருத்துவ தீர்வுகளை இங்கே பார்க்கலாம்

தொண்டையில் கிச் கிச் ஏற்படுகிறதா? இதனை சரி செய்ய இதோ சில சிறந்த தீர்வு | Hoarseness In Throat Siddha Medicine In Tamil

  • மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும்.
  • காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.
  • ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.

  • கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

  • திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

  • தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம்.

  • வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.

      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.