பாட்டி டயானாவுடன் பேசிய இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி!


இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி நெட்ஃபிளிக்ஸ் வீடியோவில் ‘பாட்டி டயானா’விடம் பேசும் வீடியோகாட்சி இடம்பெற்றுள்ளது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லின் மகன் ஆர்ச்சி ஹாரிசன், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆவணத்தொடரின் எபிசோட் ஒன்றில் இளவரசி டயானாவின் புகைப்படத்துடன் பேசுவதைக் காணலாம்.

அந்தக் காட்சியில், 2019-ஆம் ஆண்டில் தங்களுக்கு பிறந்த முதல் குழந்தையான ஆர்ச்சிக்கு அவரது தந்தைவழி பாட்டியான இளவரசி டயானாவை, அவரது புகைப்படம் ஒன்றை காட்டி மேகன் மார்க்கல் அறிமுகப்படுத்துகிறார்.

பாட்டி டயானாவுடன் பேசிய இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி! | Prince Harry Son Archie Talks Grandma DianaTim Graham/Netflix

குழந்தை ஆர்ச்சி தனது பாட்டியின் புகைப்படத்தைப் பார்த்து மழலை மொழியில் பேசுவைத்து அதில் பதிவாகியுள்ளது.

மேகன் மார்க்கலும், ஆர்ச்சியிடம் “யாரது., யார் அது” என கேட்டு, “ஹே பாட்டி” என அழைக்க சொல்லித்தருகிறார். பின்னர், “ஆமாம். அது உன் பாட்டி டயானா” என கூறுகிறார்.


Netflix

அக்காட்சியின் பின்னணியில், இளவரசர் ஹரி தனது வாழக்கையில் எதிர்கொண்டு வருவதை வார்த்தையில் விவரித்துக்கொண்டிருக்கிறார்.

ஹரி மற்றும் மேகனின் ஆவணத்தொடர் இப்போதும் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. பாட்டி டயானாவுடன் பேசிய இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி! | Prince Harry Son Archie Talks Grandma Diana



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.