
பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தேனா? – குயின்சி விளக்கம்
பிக்பாஸ் வீட்டில் ஷிவின், கதிர், குயின்சி என்றொரு முக்கோண காதல் கதை சில நாட்கள் ஓடியது. சிவின், கதிர் மீதான தனது காதலை மறைமுகமாக சொல்ல கதிர் அதை புரியாதது போலவே நடித்து மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் குயின்சியும் கதிரும் நெருக்கமாக சுற்றிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து பொதுமக்களே குயின்சியும் கதிரும் காதலிக்கிறார்கள் என்றே நினைத்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள குயின்சி, ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் கதிரை உண்மையாக காதலித்தீர்களா? என்று கேட்க, 'சிவினை வெறுப்பேத்தவே நானும் கதிரும் பிராங்க் செய்தோம். உண்மையாக காதலிக்கவில்லை' என்று கூறினார்.