புரி ஜெகன்நாதர் கோவிலில் மொபைல் போனுக்கு தடை?| Dinamalar

புரி, ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவிலுக்குள், ஜன., 1ல் இருந்து மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.

இங்கு புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மொபைல் போனால் கோவிலுக்குள் பக்தர்களின் தரிசனத்தில் இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் நிகழ்வும் நடந்து வருகிறது.

இதைத் தடுக்க, வரும் ஜனவரி முதல் கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.