மதுரை விமான நிலைய வளாகத்தில் அம்பேத்கர் சிலை… திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்த்துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி மண்டலம் 6, மதுரை மாநகராட்சி மண்டலம் 3, பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, சேரன் மகாதேவி பேரூராட்சி செயல்படுத்தப்படுகிறது

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை தமிழக முதல்வர்

தொடங்கி வைத்தார்.

விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் துறை, தனியார் நிறுவனங்கள், தூய்மை பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் பயன் பெறுவார்கள், தூய்மை பணியாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கள ஆய்வு செய்யப்படும்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தூய்மை பணிக்கான இயந்திரங்கள் இயக்கத்திறன், தூய்மை பணியாளர்கள் மாற்றுத் தொழில் தொடங்க வங்கி கடன் வசதி ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

முதல்வர் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட லோகோவை வெளியிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். முதல்வரின் வருகையையொட்டி 200 0க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

அம்பேத்கர் சிலை திறப்பு: அதனை தொடர்ந்து, மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோரும், எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின, வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாறு ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்தனர். பின்னர் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் முழு உருவ சிலையையும் கல்வெட்டுகளை முதல்வருக்கு திருமாவளவன் காண்பித்தார். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை சென்றார். தொடர்ந்து திருமாவளவன் அம்பேத்கரை போற்றும் வீதமாக வீர வணக்கம் செலுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.