புதுடெல்லி: மேற்கு வங்க ஆசிரியர் தேர்வில் நடந்த ஊழல் வழக்கில் திரிணமூல் எம்எல்ஏவின் ரூ.8 கோடி முடக்கப்பட்டுள்ளது
மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ., மானிக் பட்டாச்சார்யா. இவர் முன்பு மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் தலைவராக பதவி வகித்தார்.
அப்போது ஆசிரியர் தேர்வில் ஊழல் நடந்ததாகவும் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டு, குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது.
மானிக் பட்டாச்சார்யா, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களின் பெயர்களில்61 வங்கி கணக்குகள் இருந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இவற்றில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், நிரந்தர வைப்பு நிதி ரூ.7.93 கோடியை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கியதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது.