வெற்றியை ஊகித்த தாத்தா…1 மில்லியன் டாலர் லொட்டரி பரிசு அள்ளிய 18 வயது இளைஞர்!


அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய டால்டன் ராட்ஃபோர்ட் என்ற இளைஞருக்கு சுமார் 1 மில்லியன் மதிப்புள்ள லொட்டரி பரிசு தொகை கிடைத்துள்ளது.

லொட்டரி வெற்றி

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டல்லாஸ் பகுதியை சேர்ந்த டால்டன் ராட்ஃபோர்ட் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் பணியை முடித்து விட்டு, இரண்டாவது பணிக்காக சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது மக்கள் சேவை துறையில் பணிபுரிந்து வரும் டால்டன்  ராட்ஃபோர்ட், டல்லாஸ் நெடுஞ்சாலையில் உள்ள வில்ஸ் உணவு கடை III-யில் நிறுத்தி ஊக்க பானம் மற்றும் இரண்டு அதிர்ஷ்ட லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

வெற்றியை ஊகித்த தாத்தா…1 மில்லியன் டாலர் லொட்டரி பரிசு அள்ளிய 18 வயது இளைஞர்! | Dalton Radford Win Mega Lottery After Grandpa SaysGetty Images/iStockphoto

அதன் தொடர்ச்சியாக வாகன நிறுத்துமிடத்தில் இருந்து லொட்டரி டிக்கெட்டை சரி பார்த்த டால்டன், தான் வெற்றி பெற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தான் 1 மில்லியன் டாலர் லொட்டரியில் வெற்றி பெற்று உள்ளோம் என்பதை அறிந்த டால்டன் உடனடியாக அவரது அம்மா, அப்பா மற்றும் தாத்தா ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார், அத்துடன் இந்த செய்தியை கேட்டு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும் டால்டன் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியை ஊகித்த தாத்தா…1 மில்லியன் டாலர் லொட்டரி பரிசு அள்ளிய 18 வயது இளைஞர்! | Dalton Radford Win Mega Lottery After Grandpa SaysDalton Radford with his father Tim Radford- டால்டன் ராட்ஃபோர்ட் அவரது தந்தை டிம் ராட்ஃபோர்டுட்( Newsflash)

வெற்றியை ஊகித்த தாத்தா

லொட்டரி டிக்கெட் வாங்கியது தொடர்பாக விளக்கியுள்ள டால்டன், நான் லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வெற்றி பெறுவேன் என என்னுடைய தாத்தா இரண்டு வாரங்களுக்கு முன்பே ஊகித்து கூறினார்.

அதைப்போலவே இப்போது நான் சுமார் 1 மில்லியன் தொகை மதிப்புள்ள லொட்டரியை வெற்றி பெற்றுள்ளேன் என டால்டன் ராட்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

டால்டன் வெற்றி தொடர்பாக லொட்டரி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், பரிசு தொகையை பெற தலைமை அலுவலகத்திற்கு வியாழக்கிழமை டால்டன் ராட்ஃபோர்ட் வரும் போது முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட வேண்டி இருந்தது.

வெற்றியை ஊகித்த தாத்தா…1 மில்லியன் டாலர் லொட்டரி பரிசு அள்ளிய 18 வயது இளைஞர்! | Dalton Radford Win Mega Lottery After Grandpa SaysGetty Images/iStockphoto

 டால்டன் பரிசு தொகையை 50,000 டாலர்களாக ஆண்டு சந்தா முறையில் பெற போகிறீர்களா? அல்லது மொத்த தொகையாக 600,000 டாலர்களை பெற போகிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது, டால்டன் ராட்ஃபோர்ட் மொத்த தொகையாக  600,000 டாலர்களை பெற்று கொள்கிறேன் என தெரிவித்ததாக லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லொட்டரி பரிசு தொகையை வென்றுள்ள இளைஞர், அந்த பணத்தில் புதிய Silverado பிக்கப் டிரக் ஒன்றை வாங்க போவதாக தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.