Keerthy suresh: திரைத்துறையில் பாலியல் தொல்லைகள்..சினிமாவை விட்டு விலகிவிடுவேன்..அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகமான அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து வெளியான ரெமோ கோலிவுட் வட்டாரங்களில் கீர்த்தி சுரேஷை பிஸியான நடிகையாக மாற்றியது. இதையடுத்து விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Pradeep ranganathan: லவ் டுடே புகழ் பிரதீப்பை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை..!

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்து வருகின்றார்.

இதற்கு காரணம் அவருக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது, அதனால் தான் படங்களில் கமிட்டாகாமல் இருக்கின்றார் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் பேசிய கீர்த்தி சுரேஷ், திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக பல செய்திகள் வருகின்றன. ஆனால் எனக்கு அதுபோல் எந்த பாலியல் தொல்லைகளும் நடந்ததில்லை.

இருப்பினும் என் நண்பர்களுக்கு நடந்ததாக அவர்கள் கூறி நான் கேட்டிருக்கின்றேன். ஒரு வேளை அவ்வாறு எனக்கு பாலியல் தொல்லை எதிர்காலத்தில் நடந்தால் அப்படி பட்ட சினிமாவே வேண்டாம் என நான் திரைத்துறையை விட்டே ஒதுங்கிவிடுவேன் என்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது
உதயநிதி
நடிப்பில் உருவாகும் மாமன்னன் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.