mandous cyclone precautions: 2 லட்சம் மின்கம்பங்கள்… 11 ஆயிரம் களப் பணியாளர்கள்.. அமைச்சர் மாஸ் அப்டேட்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பாலாஜி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாண்டஸ் புயலின் தாக்கங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் .11,000 களப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் மின்கம்பங்கள் தயாராக உள்ளன.

பழுதடைந்து இருந்த 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பராமரிப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு மின்வினியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த ஒரு சிறிய பிரச்சனையும் இல்லாத வகையில் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்க!

முன்னதாக, மாண்டஸ் புயல், மழை காரணமாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்றிரவு மின் விநியோகம் தடை செய்யப்படுமா என்ற அச்சம் கலந்த கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்திருந்தது.

பொதுமக்களின் இந்த கேள்விக்கு, தமி்ழ்நாடு மின்சார வாரியம் இன்று மதியம் விளக்கம் அளித்திருந்தது. புயலின் விளைவாக மின்சார ஒயர்கள் அறுந்து விழுவது, மின் கம்பங்கள் சாய்வது போன்ற இடர்பாடுகளை சரிசெய்ய 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப முன்னெச்சரி்க்கை நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்சாரம் நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் மீண்டும் மின் விநியோகம் தரப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரையிலான எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.