இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்; அரை நிர்வாண போட்டோவை அனுப்பிய மாணவிக்கு மிரட்டல்: நட்பாக பழகிய நண்பர் கைது

அமராவதி: இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருக்கு அரை நிர்வாண போட்டோவை அனுப்பிய மாணவிக்கு பலாத்கார மிரட்டல் விடுத்தவனை அமராவதி போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், அங்குள்ள ஹாஸ்டலில் தங்கியுள்ளார். இவருக்கும் ஆண் நண்பர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களில் நெருங்கியும் பழகியுள்ளனர். மாணவியிடம் போனில் பேசிய அந்த இளைஞர், ‘உன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை அனுப்பவும்’ என்று கேட்டுள்ளான்.

அதற்கு அந்த பெண்ணும் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைத்தார். அடுத்த சில நாட்களுக்கு பின்னர், தன்னுடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்குவேன் என்று அந்த இளைஞன் மிரட்டியுள்ளான். அதிர்ச்சியடைந்த மாணவி, அவரது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார். அதையடுத்து சைபர் கிரைமில் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த இளைஞனின் ‘மிஸ்டர் பெஃபிக்ரா’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கினர். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஆர்த்தி சிங் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகியதால், அந்தப் பெண் ஏமாற்றப்பட்டார். தற்போது அந்த இளைஞரை கைது செய்துள்ளோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.