நடிகை, நாடன் ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்ட திறமையான பெண் தான் காயத்ரி ரகுராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் காயத்ரி ரகுராம் பல விமர்சனங்களுக்கு உள்ளானார், இவரை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் இறுதியில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற போது அவருக்கு காயத்ரி உறுதுணையாக நின்று, கமலிடமும் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார். இந்த நிகழ்ச்சி இவருக்கு சிறந்ததொரு கம்பேக்காக அமைந்தது, இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டார், அடிக்கடி இவரை பற்றி ஊடகங்களில் செய்திகளும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை எதனால் முடிவுக்கு வந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படம் மூலமாக தான் காயத்ரி ரகுராம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்தார், அந்த சமயத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் எனும் சாஃப்ட்வெர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் வரை செல்லவில்லை.
2008ல் காயத்ரி விவாகரத்து செய்ய முடிவெடுத்தார், பின்னர் இருவரும் 2010ம் ஆண்டில் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து அவர் கூறுகையில் தனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது, சில கருத்துவேறுபட்டால் அந்த உறவு முடிவுக்கு வந்தது. நான் இப்போது அவரை குறை சொல்ல விரும்பவில்லை, அவர் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அதனால் இனிமேல் இதை பற்றி திரும்ப திரும்ப பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.