டொரோன்டோ, கனடாவில் வீட்டில் இருந்த சீக்கிய பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில், நம் நாட்டின் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கவுர், 40, தன் கணவருடன் வசித்தார்.
கடந்த 7ம் தேதி இரவு அவர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், ஹர்பிரீத்தை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஹர்பிரீத் மரணம் அடைந்தார்.
இது தொடர்பாக, சந்தேகத்தின் அடிப் படையில் அவரது கணவரை கைது செய்து விசாரித்த போலீசார், பின் அவரை விடுவித்து விட்டனர். கொலையாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement