ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சமையல் ‘காஸ்’ சிலிண்டர் வெடித்து, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூர்அருகே புங்ரா என்ற கிராமத்தில், சுரேந்திர சிங் என்பவர் வீட்டில் நேற்று திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது.
இதற்காக, அவரது உறவினர்கள் நேற்று முன்தினமே அவர் வீட்டில் கூடினர். நேற்று முன்தினம் மதியம் அனைவருக்கும் உணவு தயாரித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
வீடு எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காயம் அடைந்ததில் சிலருக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement