திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கோவில்குப்பம் பகுதியில் சம்பத் என்வரது நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆறு பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. நேற்று பெய்த மழையில் அப்பகுதி வழியே சென்ற மின் கம்பங்களுக்கு இடையே சென்ற குறைந்த அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஆறு பசு மாடுகளும் பலியாகின.
இது குறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் மாடுகளை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.