சென்னை: புயல் வரும் நாள் அன்று நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்திருந்த பாஜக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை; உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
