கச்சார்,அசாமில் லாரியில் கடத்தி வரப்பட்ட, ‘யாபா’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு வந்த லாரியை மடக்கி, போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், ௨௦ பாக்கெட்டுகளில், இரண்டு லட்சம் யாபா என்ற போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து கடத்துவது தெரியவந்தது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் வந்த நான்கு பேரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில், தின்சுக்கியா மாவட்டத்தில் நேற்று காலை பஸ்சில் கடத்தி வரப்பட்ட ௧ கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement