சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சனிக்கிழமை நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவுக்கும், சனிக்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை (நவ.9) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.