மேகன் மார்க்கல் சொல்வது எல்லாம் பொய்; இங்கிலாந்து இளவரசருக்கு சிக்கல்.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். மேலும், பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டது.

அரசு குடும்பத்தின் இந்த பேச்சால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிந்தித்து இருக்கிறேன். உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரி கூறுகையில், “அந்த சமயத்தில், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அரச குடும்பத்தில் சிக்கி கொண்டிருந்தேன் என்பது தெரியாமலேயே, மாட்டிக் கொண்டிருந்தேன். இப்போது, என் தந்தை, அண்ணன் வில்லியம்ஸ் சிக்கிக்கொண்டுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறிய பின்னர் எனது தந்தை, என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்” என தெரிவித்தார்.

இதையடுத்து, 2020ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இன்வெறி பார்க்கப்படுவதாக இளவரசரே குற்றம் சாட்டி, அரச குடும்பத்தில் இருந்து விலகியது பரவலாக பேசப்பட்டது. உயரிய பதவி, சமூக அந்தஸ்து, செல்வம் ஆகியவற்றை உதறி தள்ளியதால், உலகமெங்கும் சமத்துவத்தை விரும்புவர்கள் தம்பதிகளை பாராட்டினர். இதையடுத்து தம்பதிகளுக்கு, மனித உரிமைகளுக்கான உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் குறித்த ஆவண தொடர், கடந்த வியாழக்கிழமை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஹாரி & மேகன் என பெயரிடப்பட்ட அந்த ஆவண தொடரானது, தம்பதிகளின் காதல் மற்றும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இனவெறி அனுபவங்களை காட்சிபட்டுள்ளது.

இந்தநிலையில் ஹாரி-மார்கெல் குறித்த ஆவணத் தொடருக்கு இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராணி எலிசபெத்தின் தலைமைத்துவத்தை இழிவுபடுத்துவதாகவும், அரச குடும்பத்தைப் பற்றி பொய்களை பரப்பி வருவதாகவும், மேலும் இங்கிலாந்தினரை இனவெறி பிடித்தவர்களாக ஆவணத் தொடர் காட்சிபடுத்தியுள்ளதாகவும் இங்கிலாந்தின் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்துவருகின்றன. மேலும் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் எம்பி பாப் சீலி, தம்பதியரின் அரச பட்டங்களை அகற்றுவதற்கான சட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில் ஆவணத் தொடரில் மேகன் மார்க்கல் பொய் சொல்லி இருப்பதாக அவரது உடன்பிறப்பு கூறியுள்ளார். இது குறித்து பிரிந்துவிட்ட ஒன்றுவிட்ட உடன்பிறப்பு தாமஸ் மார்க்கல் ஜூனியர் கூறும்போது, ‘‘ இந்த ஆவணத் தொடர் பயங்கரமானது. ஆவணப்படம் பல்வேறு நிலைகளில் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது. இது உண்மையில் கொஞ்சம் தொந்தரவு தருகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது வீண்பழி சுமத்துகிறது.

வேலையே வேண்டாம் என அச்சப்படும் அளவிற்கு அலுவலக சாலை அமைந்துள்ளது

மேகன் தனக்கு குடும்பம் இல்லை எனவும், தந்தை இல்லை எனவும் கூறுகிறார். பிரின்ஸ் ஹாரி தற்போது மேகனுக்கு தந்தை இல்லை என கூறுகிறார். இது அதிர்ச்சியாக உள்ளது. எங்கள் குடும்பத்தை மேகன் புறம் தள்ளிவிட்டார். குடும்பம் இல்லாததை போன்று பாவனை செய்துள்ளார். நாங்கள் இங்கு தான் உள்ளோம்.

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை; ஈரான் அதிரடி.!

இந்த உண்மையை சொல்வதற்காகவே அடுத்த ஆண்டு எங்கள் தரப்பில் இருந்து ஆவணத் தொடரை தயாரிக்க உள்ளோம். அப்போது உண்மை வெளிப்படும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் மேகன் மார்க்கலின் சகோதரி சமந்தாவும், தங்களது தந்தை மார்க்கல் சீனியர் இந்த ஆவணத்தொடரை பார்க்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.