மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம்


கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர், ராணியாரின் மறைவு என பல முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தமது ஆருடத்தை வெளியிட்டுள்ள பிரேசில் நாட்டவரான Athos Salomé தற்போது மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார் என கணித்துள்ளார்.

உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறி, தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி சமீபத்தில் உண்மைகளை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டனர்.

மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம் | Living Nostradamus Predictions For Meghan Markle

@getty

பிரித்தானிய மக்கள், ராஜகுடும்பத்து விசுவாசிகள் என பலரும் அந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது பெரும் ஆதரவை பெற்றுவருகிறது.
இந்த நிலையிலேயே பிரேசில் நாட்டவரான Athos Salomé இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கல் தொடர்பில் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில், மேகன் மெர்க்கல் மிக விரைவில் வரலாற்றில் இடம்பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.
2025 மற்றும் 2026ல் அவ்வாறான ஒரு நிகழ்வு மேகன் மெர்க்கல் வாழ்க்கையில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்

மேலும், அடுத்த கோடைகாலத்தில் இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடக்கும்.
2023 ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஹரியின் வாழ்க்கை மொத்தமாக மாறும். ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்தினிடையே ஹரியின் வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு சம்பவம் நடக்கும்.

மேகன் மெர்க்கல் வரலாற்றில் இடம்பெறுவார்: பிரித்தானிய ராணியார் மறைவை கணித்தவரின் புதிய ஆருடம் | Living Nostradamus Predictions For Meghan Markle

Credit: netflix

சுருக்கமாக சொல்வதென்றால், 2023 அக்டோபர் வரையில் சில பல சூழ்நிலைகளை ஹரி எதிர்கொள்ள இருக்கிறார் எனவும், ஏப்ரல் மாதத்தில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நிகழும் எனவும் Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் மர்மம் சூழ்ந்திருப்பதாகவும், குறிப்பாக ஹரியில் வாழ்க்கையில் அது வெளிப்படையாக உள்ளது எனவும்,
2027 மற்றும் 2028ல் பிரித்தானிய ராஜகுடும்பம் தொடர்பில் இன்னொரு கதை வெளியாகி, அது வரலாறாக மாறும் எனவும் Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.