ரஷ்யா – உக்ரைன் போர்: கண்ணீர் விட்டு அழுத போப் ஃபிரான்சிஸ்!

இத்தாலி தலைநகர் ரோமில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய போப் ஃபிரான்சிஸ், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார்.

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் எனவு, அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக கன்னி மேரியின் சிலையை வணங்குவதற்காக இத்தாலி நாட்டுத் தலைநகர் ரோமிற்கு போப் ஃபிரான்சிஸ் சென்றுள்ளார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக அவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அப்போது உரையாற்றிய போப் ஃபிரான்சிஸ், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழுதார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

‘இந்தியா கூட்டாளி மட்டுமல்ல; அதுக்கும் மேல..!’ – வெள்ளை மாளிகை உயரதிகாரி

இதையடுத்து, தன்னை தானே தேற்றிக் கொண்டு பேசிய போப் ஃபிரான்சிஸ், “உக்ரேனிய மக்கள் அமைதிக்காக நீண்ட காலமாக இறைவனிடம் பிரார்த்தித்து வருகிறோம். அங்கு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், தந்தையர்கள், இளைஞர்களின் வேண்டுகோளை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.” என்றார்.

View this post on Instagram A post shared by ABC News (@abcnews)

கடுமையான குளிர்காலத்திற்கு மத்தியில், உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆனாலும், உலகளாவிய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தாக்குதல்களை தொடரப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் குழந்தை ஒன்றுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ வெளியாகி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.