வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!


வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று  போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி கடைசி போட்டியில் பழித் தீர்த்து கொண்டது. இந்தியாவின் பதிலடியில் வங்கதேச அணி நிலைக்குலைந்து போனது.

3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. ஷிகர் தவான் 3 ஒட்டாங்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 4 ஓட்டங்களில் இருக்கும் போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.

இஷான் கிஷன், கோலி சாதனை

வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! | India Beat Bangladesh By Huge 227 Runs 3Rd OdiTwitter@imkuldeep18

இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் அபாரமாக விளையாடி ஓட்டங்களை குவித்தார். 126 பந்துகளில் அதவேக இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். பின்னர் 15 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 210 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் விராட் கோலி தனது பங்கிற்கு ஒரு சாதனையை முறியடுத்தார். இன்றைய ஆட்டத்தில் 85 பந்துகளில் தனது 44வது சர்வதேச ஒருநாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் முலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் அடித்து ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார்.

பின்னர், கோலி 113 ஓட்டங்களில் வெளியேற, அதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! | India Beat Bangladesh By Huge 227 Runs 3Rd OdiTwitter@imkuldeep18

வாசிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும், அக்சர் பட்டேல் 20 ஓட்டங்களும் எடுக்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 409 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது.

கடின இலக்கு

410 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி அதிரடியாக ஆட முற்பட்டு கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. அனாமுல் ஹக் 8 ஓட்டங்களிலும், லிட்டன் தாஸ் 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க ஆரம்பமே அந்த அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.

முஷ்பிகுர் ரஹிம் 7 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாசர் அலி 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

தனி ஆளாக போராடிய ஷகிபுல் ஹசன் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகெடுத்தார். இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட மகமுதுல்லா 20 ஓட்டங்களிலும், மெஹதி ஹசன் 3 ஓட்டங்களிலும் வெளியேற, அந்த அணி 34 ஓவர் முடிவில் 182 ஓட்டங்களில் சுருண்டது.

வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! | India Beat Bangladesh By Huge 227 Runs 3Rd OdiAP

இந்திய அணி இமாலய வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசத்தின் வரலாற்றில் இது மிகப் பெரிய தோல்வி ஆகும்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.