உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ஆம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாள் இதுவே.
ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், மனித வாழ்வின் ஆதாரம். ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளைக்கொண்டு இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
‘உலகளாவிய சுகாதார பாதுகாப்பு’ என்ற கருத்தின் அடிப்படையில், இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சுகாதார பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலம் என்பது இந்தாண்டின் மையக்கருத்து
உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பளிக்கும் பணியைச் செய்ய உலக நாடுகளை உலக நலவாழ்வு அமைப்பு வலியுறுத்துகிறது. உணவு, குடிநீர், காற்று, இருப்பிடம், வாழும் முறை என எல்லாவற்றிலும் சுகாதாரம் பேணப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த நாள் 68 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், பல நாடுகள் சுகாதார நிலையில் தன்னிறைவை எட்டவில்லை என்பதே உண்மை.
இதற்கு, ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், சுகாதாரம் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதற்கு, அந்தந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். மனிதனே மனிதக்கழிவுகளை அள்ளும் நிலை ஒழிய வேண்டும். ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாடவேண்டிய உலக சுகாதார தினம் இன்று.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement