சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் சாதனையை முந்திய கோலி

சிட்டங்காங்:
ங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் அடித்து ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார்.

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 409 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்தது.

410 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 34 ஓவர் முடிவில் 182 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் விராட் கோலி, 85 பந்துகளில் தனது 44வது சர்வதேச ஒருநாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் முலம் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதம் அடித்து ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.