கீவ், -உக்ரைன் நகரங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் வாயிலாக ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால், 15 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்.
கிழக்கு ஐரோப்பியநாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது.
ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதிலமடைந்து உள்ளன.
சில வாரங்களுக்கு முன், கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படை பின்வாங்கியது; இது, உக்ரைனுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சில நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
தெற்கு உக்ரைனின் முக்கிய நகரமான ஒடெசா மீது, ரஷ்ய படையினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.
ட்ரோன்கள் வாயிலாக மின்சார வினியோக அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஒடெசா உட்பட அருகில் உள்ள சில நகரங்கள் மற்றும் சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ௧௫ லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
![]() |
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ரஷ்யாவின்தாக்குதலால் மருத்துவமனை மற்றும் அங்குள்ளபிரசவ வார்டுகள் உள்ளிட்ட முக்கிய உள் கட்டமைப்புகள் மின்சாரம்இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘துரோகிகள் தண்டிக்கப்படுவர்’
தெற்கு உக்ரைன் நகரான கெர்சோனில் இருந்து, சில வாரங்களுக்கு முன் ரஷ்ய படைகள்பின்வாங்கின. இது, உக்ரைனின் முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. இதையடுத்து, ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் நபர்களை, உக்ரைன் போலீசார் வேட்டையாடி வருகின்றனர். இதுவரை ௧௩௦ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு துணை போகும் துரோகிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என, உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்