
காசேதான் கடவுளடா : துணிவு அடுத்த பாடல் விரைவில்…
வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியார், வீரா உள்பட பலர் நடித்துள்ள படம் துணிவு. பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிளாக அனிருத் பாடிய சில்லா சில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அடுத்தபடியாக இன்னும் சில தினங்களில் துணிவு படத்தின் இரண்டாவது பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடல் வெளியாக இருப்பதாக தற்போது ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இதுதவிர இப்படத்தில் இன்னொரு பாடலும் இருப்பதாகவும் அந்த பாடலும் படத்தின் ரிலீசுக்கு முன்பே வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.