கேரள மாநிலம் சபரிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து, பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இன்றைய தரிசனத்திற்காக சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 260 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த, கேரள அரசு சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.