கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடத்தி ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்பொழுது அதே நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை பார்க்கும் வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று சிறுமி பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காதலுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், சிறுமியை தேடி வந்த நிலையில், சங்கம்பாளையத்தில் உள்ள அந்த வாலிபரின் அண்ணன் வீட்டிலிருந்த சிறுமியை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்று பாலியம் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.