தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்: சீதனத்தை பார்த்து வியந்த உறவினர்கள்


தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தங்கையின் விருப்பத்திற்கு ஏற்ப சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை திருமணத்தில் சீதனமாக வழங்கி அசத்திய அண்ணன் பாசம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்

 தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுரேஷ்- செல்வி தம்பதியினரின் மகளான விரேஸ்மாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதில் திருமண வரவேற்பு மணமேடைக்கு அருகில் வந்த விரேஸ்மாவின் அண்ணன் ராயல், தானும், தனது தங்கையும் சிறு வயது முதல் ஆசையாக பார்த்து பார்த்து வளர்த்த சண்டை கிடாய், ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய் மற்றும் சண்டை சேவல் ஆகியவற்றை சீதனமாக ஒன்றின் பின் ஒன்றாக மேடையேற்றினார்.

தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்: சீதனத்தை பார்த்து வியந்த உறவினர்கள் | Sivagangai Brother Gifted Bull For Sister Wedding

இதனை பார்த்த மணமகள் விரேஸ்மா மற்றும் உறவினர்கள் அசந்து போயினர். சிலர் இதுபோன்ற சீதனத்தை யாரும் பார்த்ததே இல்லை என்றும் பேசிக் கொண்டனர்.
 

இணையத்தில் வைரல்

இந்நிலையில் திருமணத்தில் அண்ணன் வழங்கிய  ஜல்லிக்கட்டு காளை, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகிய சீதனத்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட மணமகள், பாசமாக வழங்கப்பட்ட சீதனத்திற்கு முத்தமிட்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

தங்கையின் திருமணத்தில் அண்ணனின் இத்தகைய சீதனங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தங்கையின் திருமணத்தில் அசத்திய அண்ணன்: சீதனத்தை பார்த்து வியந்த உறவினர்கள் | Sivagangai Brother Gifted Bull For Sister Wedding

பலர் இப்படி ஒரு திருமண சீதனமா? என்று ஆச்சரியத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன், மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.