போர்ச்சுகலின் 'கோல்டன் விசா'வைப் பெற முண்டியடிக்கும் பணக்கார இந்தியர்கள்

லிஸ்பன்: 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பன் மற்றும் பிற நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 350,000 முதல் 600,000 யூரோக்கள் வரை முதலீடு செய்திருக்கின்றனர். கோல்டன் விசாவைப் பெறுவதற்காக இந்த முதலீடுகளை பணக்கார இந்தியர்கள் செய்துள்ளனர். மடோனா போன்ற பல பணக்கார வெளிநாட்டினரைக் கவர்ந்த போர்ச்சுகலின் விசா அல்லது “கோல்டன் விசா” விரைவில் முடிவடையும். இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதைப் பற்றிய சமீபத்திய அறிவிப்பு ஆர்வத்தை ஈர்த்துள்ளது. போர்த்துகீசிய குடிவரவு மற்றும் எல்லை நிறுவனமான SEF இன் தரவுகளின்படி நவம்பரில் முதலீடுகள் 40 சதவீதம் உயர்ந்தன.

சமீபத்தில் நாட்டின் பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா, நாட்டின் பிரபலமான மற்றும் விமர்சிக்கப்பட்ட ரெசிடென்சி பை இன்வெஸ்ட்மென்ட் புரோகிராம் (Residency by Investment Program) என்ற திட்டத்தைக் குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

இந்த திட்டம் ஏற்கனவே “அதன் குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது” என்றும், “இனி அதை பராமரிப்பது நியாயமில்லை” என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய யூனியன் அல்லாத குடிமக்களுக்கான ஃபாஸ்ட்ராக் விசா, ரியல் எஸ்டேட்டில் குறைந்தபட்ச முதலீடு € 500,000 (4.35 கோடி INR அல்லது 527,222 USD) என்பதைக் கட்டாயமாக்குகிறது, இது மூலதன முதலீடு அல்லது வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

மேலும் படிக்க | தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா?

இந்த விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்களில் அமெரிக்க மற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. பணக்கார அமெரிக்க விண்ணப்பதாரர்கள் சீன விண்ணப்பதாரர்களை மிஞ்சும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பணக்காரர்கள் இருப்பதாக போர்த்துகீசிய குடிவரவு மற்றும் எல்லை நிறுவனமான SEF தரவுகள் தெரிவிக்கின்றன.

2022 ஜூலை மாத தரவுகளின்படி, போர்த்துகீசிய வெளிநாட்டினர் மற்றும் எல்லை சேவையின் (SEF) திட்டத்தில் முதலீடுகள் USD 3.7 மில்லியனில் இருந்து USD 8.2 மில்லியனாக 2021 ஆம் ஆண்டின் அதே மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், இந்தத் திட்டம் வெளிநாட்டினரிடம் இருந்து $6.8 பில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. .

இந்த திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தால் பணமோசடி அபாயமாக கருதப்படுகிறது. கூடுதலாக, இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கான வீடு வாங்கும் கனவை கானல்நீராக்குவதாக மக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.