மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை ஆதீனத்தின் 1,191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை விமான நிலையம் அருகே உள்ள 1,191 ஏக்கர் நிலங்களை மீட்க கோரி சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 2008ம் ஆண்டு மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி ஆதீனம், புதுவையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். முந்தைய ஆதீனம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.