18 மாத ஆட்சியில் ஸ்டாலின் செய்த சாதனை இதுதான்… அதிமுக முன்னாள் அமைச்சர் கலாய்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன் அதிமுக உசிலம்பட்டி நகர் கழகத்தின் சார்பில் சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார், ‘அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை முடக்கும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வருவதாகவும் பேசினார். தொடர்ந்து உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க ஒவ்வொரு முறையும் போராட வேண்டி உள்ளது எனவும் அலர் வேதனை தெரிவித்தார்.

18 மாத ஆட்சி காலத்தில் தனது மகனை நாளை அமைச்சராக்க போவது மட்டுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சாதனையாக உள்ளது., மக்கள் நலப்பணிகளில் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது, இந்த குடும்ப அரசியலை ஒழித்து கட்ட அதிமுக தொடர்ந்து போராடி வருவதாக உதயகுமார் ஆவேசமாக பேசினார்.

கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!

மேலும் விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. சொத்தை விற்றால்தான் சொத்து வரி கட்ட முடியும் என்ற அளவு சொத்து வரி உயர்ந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேலியாக பேசினார்.

நெடுநாளாக நீடித்துவந்த எதிர்பார்ப்புகளுக்கு பின்னர், உதயநிதி நாளை காலை (டிசம்பர் 14) 9.30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்த அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில்

அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அமைச்சராகும் உதயநிதிக்கு என்று தலைமைச் செயலகத்தில் தனி அறை தயாராகியுள்ளது. அந்த அறையை இரவோடு இரவாக ஊழியர்கள் தயார்படுத்தியுள்ளனர். உதயநிதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மற்றொருபுறம் எதிர்பார்த்தது போலவே வாரிசு அரசியல் விமர்சனங்களும் தலை தூக்கியுள்ளது. அதனை தனது செயலால் முறியடிப்பார் உதயநிதி என்கிறார்கள் அவரது அவரது ஆதரவாளர்களும், திமுக உடன்பிறப்புகளும்.

2006 -11 ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதே, ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார். அதன் பின்னர் கட்சியின் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அதேபோல், உதயநிதிக்கு நேரடியாக துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்று உடன்பிறப்புகள் சிலர் எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.