திருச்சூர் :கேரளாவின் திருச்சூரில், அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை, ௧௩ வயது சிறுவன் கடத்தியுள்ளான். 8 கி.மீ., துாரத்துக்கு ஓட்டிச் சென்ற நிலையில், போலீசார் அவனை துரத்திப் பிடித்தனர்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், ௧௩ வயதாகும், ௧௦ம் வகுப்பு படிக்கும் மாணவன், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய தந்தை அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனை வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுக்குள் நுழைந்த அந்தச் சிறுவன், அதை இயக்கி ஓட்டியுள்ளான். வாகனம் மிக வேகமாக வெளியில் சென்றது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் திருடப்பட்டதாக அதன் டிரைவர் போலீசில் புகார் கொடுத்தார். அப்பகுதியில் இருந்த மக்களும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். 8 கி.மீ., சென்ற பின், போலீசார் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். இந்தச் சிறுவன் எதற்காக வாகனத்தை கடத்திச் சென்றான் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement